2 cows killed in lightning strike near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் அருகே ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (வயது 50) விவசாயி. இவர் தனது வீட்டு அருகே மாட்டுப்பட்டி கட்டி 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்றிரவு அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது செபஸ்தியார் வளர்த்து வந்த 2 மாடுகளை இடி தாக்கியது . இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தன. இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.