2, including DMK union secretary, sentenced to one year imprisonment, fined Rs 10,000; Perambalur court verdict!

பெரம்பலூர் நீதிமன்றம் திமுக ஒன்றிய செயலாளர் உள்பட இருவருக்கு 406, 420 ஐ.பிசி 34ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து குற்றிவியல் நீதிமன்றம், சுமார் 20 ஆண்டுகள் நடந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை சர்க்கரை ஆலை சின்னாறு பகுதியை சேர்ந்தவர்கள் மெய்யப்பன், வீரபாண்டி, சுப்பிரமணி ஆகிய மூவரிடமும், அதே பகுதியை சேர்ந்த அசோகன், மதியழகன் ஆகியோரிடம் 407 வாகனம் வாங்குவதற்காக 1லட்சத்து 62 ஆயிரம், சேமிப்பு ரூ.500ம் கொடுத்துள்ளனர். அசோகனால் , கடனை ஏற்பாடு செய்து தரமுடியவில்லை. இதனால் பணத்தை திருப்பி கொடுக்க கேட்ட போது ஊரார் பஞ்சாயத்து ரூ.225000 கொடுக்க சமரசம் பேசிஉள்ளனர். அதற்காக வெற்று புரொநோட்டு கையெழுத்திட்டு நமபிக்கைக்காக எழுதி கொடுத்துள்ளார். ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், பணத்தை திருப்பி கொடுக்காததால், ஊராட்சித் துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில், பஞ்சாயத்து நடந்த சமரச பேச்சு வார்த்தையில், அசோகன் பெற்றுக் கொண்ட பணத்திற்காக குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க மதியழகன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது ரூ.7 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரூ. 50 பத்திரத்தில் உத்திரவாதத்திற்காக 10 நபர்கள் சாட்சி கையெழுத்திட்டு எழுதி கொடுத்துள்ளார். 8 மாதங்கள் ஆகியும் வாங்கிய பணம் திருப்பி கொடுக்காததால், இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பபட்டவர்கள் புகார் அளித்தனர். அங்கு விசாரணை நடைபெற்றது. வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தும் புது டிராக்டரையும் எடுத்து திருப்பி அளிக்கவில்லை என அதன் உரிமையாளர் தனபாலும் கொடுத்திருந்தார். இந்நிலையில், அந்த டிராக்டரையும், வாங்கிய கடனுக்காக கொடுத்திருந்தனர்.
அசோகன், மதியழகன், ஆகியார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி சுப்புலட்சுமி, அளித்த தீர்ப்பில், அசோகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும், மதியழகனுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபாரத்தை கட்ட தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். தனியார் டிராக்டர் நிறுவனத்தில் எடுத்த வந்த டிராக்டர் 2001 ம் ஆண்டு திருப்பி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. மதியழகன் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். அசோகன் எறையூர் சர்க்கரை ஆலையில் ஒப்பந்தராக உள்ளார்.

தலைமறைவாக உள்ள இருவரையும், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!