2 killed as car crashes on tractor standing near Perambalur 3 people were injured

பெரம்பலூர் அருகே டிராக்டர் மீது கார் மோதி 2 பேர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியை சேர்ந்தவவர்கள் ராஜேந்திரன் மகன் கவியரசன் (வயது 27), மணி மகன் முத்தரசன் (26) மற்றும் லாடபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சதீஸ் (21), சேகர் மகன் வினோத்(21) மற்றும் ராஜேந்திரன் மகன் டிரைவர் சுரேஷ் (30) ஆகியோர் ஒரு காரில் லாடபுரத்திற்கு பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை சுரேஷ் ஓட்டி வந்தார். கார் ஆத்தூர் சாலை கோனேரிபாளையம் அருகே வந்தபோது ஆலம்பாடி பிரிவு சாலையில் நின்றுக்கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த சாலைவிபத்தில் காரில் வந்த கவியரசன், முத்தரசன் ஆகியோர் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று இறந்த கவியரசன் மற்றும் முத்தரசன் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவர் சுரேஷ், சதீஸ், வினோத் ஆகியோர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!