பெரம்பலூர் : குன்னம் தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரம் ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.எல்ஏ.,சிவசங்கர் இன்று வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை ஊராட்சிக்குட்பட்ட சாத்தநத்தம் கிராமத்தில் பொதுமக்களால் கட்டப்பட்ட திருமணகூடத்திற்கு மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகளும், வேப்பூர் பாரதிதாசின் கலைக்கல்லூரிக்கு இருக்கைகள் வழங்கும் விழாவும் இன்று காலை 11.30 மணி
முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இதில் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எல்.ஏ.,சிவசங்கர் கலந்து கொண்டு, வேப்பூர் பாரதிதாசன் கலைக்கல்லூரிக்கு 2லட்சம்மதிப்பலான 200 இருக்கைகள் மற்றும் மேஜைகளையும், சாத்தநத்தம்கிராமத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 மின் விசிறிகள் மற்றும்15 மின் விளக்குகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் வேப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன்,வர்த்தக அணி துணைச்செயலாளர் பெரியசாமி, பொதுக்குழு ஒறுப்பினர் ராஜேந்திரன், வேப்பூர்
ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கரிகாலன், அன்பழகன், ராஜேந்திரன், கருணாநிதி உட்பட பலர் உடனிருந்தனர்.