2 phase Local Body Elections in Perambalur District, Fees, Details: Collector’s announcement

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கை 09.12.2019 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் 09.12.2019 முதல் துவங்கும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 5.00 மணியுடன் முடிவடையும்

வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று காலை 8.00 மணிக்கு தொடங்கும்.


தேர்தல் அட்டவணை

தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் பெறுதல் 9.12.2019

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 16.12.2019

வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் 17.12.2019

வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் 19.12.2019

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்

முதல் கட்ட வாக்குப்பதிவு 27.12.2019
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 02.01.2020

தேர்தல் நடவடிக்கை முடிவுபெறும் நாள் 04.01.2020

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல்கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் 06.01.2020

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள்11.01.2020


கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படையில் அல்லாமல் நடைபெறும் தேர்தல்கள்

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

இரண்டு கட்டத் தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.12.2019 அன்று பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக 30.12.2019 அன்று வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள பதவியிடங்கள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் -8

ஊராட்சி ஒன்றிய குழு வாh;டு உறுப்பினா; பதவியிடங்கள்-76

கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள்-121

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள்-1032


இதில் 27.12.2019 அன்று முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் , 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 53 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 462 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறும்.

30.12.2019 அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் ,

39 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 68 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 570 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறும்.

வாக்குச்சாவடிகள்

இத்தேர்தலில்,முதல் கட்ட வாக்குப்பதிவில் 293 வாக்குச்சாவடிகளிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 355 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 648 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்காளர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 3,80,420 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,88,060 பெண் வாக்காளர்கள் 1,92,335 மற்றும் மூன்றாம் பாலினத்தவா; 25 பேர் உள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 9 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 165 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 5268 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் வைப்புத்தொகை

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் பின்வருமாறு வைப்புத்தொகை செலுத்த வேண்டும்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.200, கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் 600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல ரூ.1000

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுகக்கு… கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.100, கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் ரூ300, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.300, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.500,


மறைமுக தேர்தல்கள்:

சாதாரண நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக்கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 11.01.2020 அன்று நடைபெறும்.
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடம் 1, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடம் 1, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியிடங்கள் 4, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்கள் 4, கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்கள் 121, மொத்தம் 131 என பெரம்பலூர் மாவட்டட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!