20 MW Hydro Power project in Kollimalai Participation in ministers near in Namakkal
நாமக்கல் : கொல்லிமலையில் 20 மெகாவாட் நீர் மின் திட்ட அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது.
அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சின்ன கோவிலூர் கிராமத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு, எரிசக்தி துறை அரசு முதன்மைச் செயலர் முகமது நசிமுதின் தலைமை வகிக்கிறார். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்றுப் பேசுகிறார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி விழாவில் கலந்துகொண்டு நீர் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார். சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார்.
நாமக்கல் எம்.பி. சுந்தரம், சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம்கபூர் திட்டம் குறித்து விளக்கிப் பேசுகிறார்.