20 pound jewelery, 65 thousand cash looted in Perambalur district; Mysterious persons handcuffed at midnight in 2 villages!
பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர் அருகே உள்ள மிளகாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி நர்மதா (வயது 27),. தர்மராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், நர்மதா அத்தை வீடான கற்பகம் வீட்டில், நேற்றிரவு தங்கியுள்ளார். வீட்டின் பின்புற கதவு உள்ளே நடு தாழ்பாள் போட்டும், கதவலின் மேல் தாழ்பாள் போடாமல் தூங்கி உள்ளனர். இன்று அதிகாலை சுமார் 03:30 மணியளவில் வீட்டின் பின்புற கதவை தள்ளி திறந்து வீட்டினுள் நுழைந்த 2 மர்ம நபர்கள், தூங்கிகொண்டு இருந்த நர்மதாவின் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க தாலி செயின் பறித்தனர் அப்போது திடுக்கிட்டு எழுந்த நர்மதா சத்தம் போட்டார். அவரை கொள்ளையர்கள் கதவின் முகப்பில் தலையை மோதி கழுத்தில் அணிந்திருந்த தாலிசெயினை பறித்து கொண்டு, பின்புற வாசல் வழியாக சோளகாட்டில் புகுந்து தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீவிர நடத்தி வருகின்றனர். வலதுகண் புருவத்தில் காயமடைந்த நர்மதா லப்பைக்குடிக்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போன்று, ஆலத்தூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் கணபதி மனைவி செல்லம், அவருடைய மகன் செந்தில் இருவரும், நேற்றிரவு வீட்டில் படுத்து தூங்கும்போது, பின்பக்க கதவை திறந்து வீட்டில் இருந்த மர்ம நபர்கள் 8 பவுன் நகை மற்றும் ரு.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே கிராமத்தில், மணிவேல் என்பவரது வீட்டில் 8 பவுன் தங்க நகையையும், 15 ஆயிரம் ரொக்கத்தையும், கொள்ளையடித்து சென்றனர். மேலும், அடுத்தடுத்து தொடர்ந்து 10 வீடுகளில் கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு அமாவாசை என்பதோடு மட்டுமில்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் கும்மி இருட்டாக இருந்ததை கொள்ளையர்கள் பயன்படுத்தி ஆள்நடமாட்டம் செல்வது தெரியாத அளவிற்கு நூதனமாக தப்பி சென்றனர். இக் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.