2016 – 2017 for the year elementary, middle school teachers change, for an promotion is going to Aug 6th discussion.
மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.இரா.எலிசபெத் விடுத்துள்ள தகவல் :
தமிழக அரசின் ஆணையின்படி 2016 – 2017ஆம் ஆண்டிற்கான தொடக்க , நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் , மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 06.08.2016 முதல் பெரம்பலூர் ஆர்.சி. பாத்திமா துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது.
அதன்படி, 06.08.2016 அன்று முற்பகல் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 06.08.2016 அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பொதுமாறுதல் கலந்தாய்வும் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடைபெற உள்ளது.
மேலும் 07.08.2016 அன்று முற்பகல் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், 07.08.2016 அன்று பிற்பகல் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
13.08.2016 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும், 14.08.2016 அன்று முற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும்(ஒன்றியத்திற்குள்), பிற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) -ம், 20.08.2016 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் (இணையதளம் வாயிலாக), 21.08.2016 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான(இணையதளம் வாயிலாக) கலந்தாய்வும் நடைபெற உள்ளது, என தெரிவித்துள்ளார்.