நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கபட்டுள்ள பறக்கும் படை மற்றும் தீவர கண்காணிப்புக் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்கும் குழுக்களின் செயல்பாடுகளில் செயல்படும் அலுவலர்களின் கோரிக்ககைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் எவ்வாறு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும், எப்படி விதிமீறல்களை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், பறக்கும் படை மற்றும் தீவர கண்காணிப்புக் குழுவினருக்கு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை தொகுத்து வழங்க வேண்டும் என்று தேர்தல் பிரிவு வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கினார்.
இரவு நேரங்களில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டுமென்று கூறிய மாவட்ட ஆட்சியர் இரவுப் பணி செய்யும் குழுக்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக இரவுநேரத்தில் காவலர்கள் பயன்படுத்தும் கைப்பிடியுடன் கூடிய சிவப்பு நிற விளக்குகளை வழங்கவும், வாகன விளக்கு வெளிச்சத்தை எதிரொலிக்கும் உடைகளையும் வழங்க ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று கூறினார்.
வாகனங்களில் பணம், பொருள் இருப்பது கண்டறிப்பட்டால் அவர்கள் உரிய ஆவணம் வைத்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
ஆவணங்கள் இல்லாதபட்டசத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்.
அனுமதியின்றி அரசியல் கட்சிகளின் கொடிகளை கட்டி வரும் வாகனங்ளையும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.