2017 – Local elections: polling call to the comments
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாதாரண உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2016 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்களில் திருத்தங்கள் ஏதுமின்றி 31.03.17 அன்று மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் ஆகிய அலுவலகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள், போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களது கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) எழுத்து மூலமாக 03.04.17 க்குள் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.