22 Communist Party of CPM Communist Party welcomed the delegation at Perambalur

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்ரவரி 17 ஆம்தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிது.

அதன் பிரச்சார கொடிப்பயணம் 11.2.2018 அன்று சென்னையில் தொடங்கி இன்று பெரம்பலூர் வந்தது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அதிர்வேட்டுகள் முழங்க சிபிம் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநிலக்குழு உறுப்பினர்கள் பாக்கியம், சுகந்தி, பாண்டி, ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, ஆர்.அழகர்சாமி, பி.ரமேஸ், எ.கலையரசி, எஸ்.அகஸ்டின், மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி.டி.ராஜாங்கம், எ.கணேசன், பி.கிருஷ்ணசாமி, மாதர் சங்க நிர்வாகி கல்யாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் திருச்சி வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!