24-hour election control room in Perambalur: Collector visited!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024-க்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் 16.03.2024 முதல் அமலுக்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அறை செயல்பட்டு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இக்கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 299188, 299492, 299433, 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம். மேலும காவல்துறையின் சார்பில் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை 9498100690 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை cVIGIL என்ற செயலியில் புகைப்படமாகவும், வீடியோ/ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு (MCMC) அறையில் தொலைகாட்சி மூலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் பிற சேனல்கைளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், வேட்பாளர்களின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.