
25 injured in Load auto accident near PERAMBALUR
பெரம்பலூர் மாவட்டம், நமையூர் கிராமத்தில் உள்ள வனக்காடுகள் பகுதியில் பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
நமையூர் கிராமத்தைச் சேர்ந்தவரின் உறவினர் ஒருவர் பாலையூரில் இறந்து விட்டார். அவரது துக்க நிகழ்ச்சிக்கு சுமார் 35க்கும் மேற்பட்டோர் ஒரு லோடு ஆட்டோவில் பாலையூருக்கு சென்று கொண்டு இருந்தனர். லோடு ஆட்டோ நமையூர் வனக்காடுகள் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி பின்புறமாக கவிழ்ந்தது. இதில் லோடு ஆட்டோவில் சென்ற பரஞ்சோதி (வயது 65) ராஜேஸ்வரி (59) கஸ்தூரி (38) மலர்கொடி (60) கிருஷ்ணவேணி (78) மலர் (48) உட்பட சுமார் 25பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பபி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.