25 people booked for 144 violations in Perambalur district 26 arrested.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருந்த நபர்கள் மீது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் காவல் நிலையத்தில்- 5, பாடாலூர் காவல் நிலையத்தில்-3, மருவத்தூர் காவல் நிலையத்தில்-3, அரும்பாவூர் காவல்நிலையத்தில்- 2, குன்னம் காவல் நிலையத்தில் 4, மங்களமேடு காவல் நிலையத்தில்- 5, வ.களத்தூர் காவல் நிலையத்தில் – 2, மற்றும் கை.களத்தூர் காவல் நிலையத்தில்- 1 என மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்தும், 26 நபர்கள் கைது செய்தும், 10 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.