பெரம்பலூரில் வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது கீழ் தளத்தில் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்க பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள கல்யாண் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மனைவி ஜெயா(30), நிலவும், வெப்பததினால் ஏற்பட்டுள்ள புழுக்கத்தால், காற்றோடத்திற்காக செல்வராணி தனது மாமியார் ஜெயா மற்றும் குழந்தைகள் ரிஷிவர்த்தினி,தர்ஷனா, கௌதம்கிருஷ்ணா ஆகியோருடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி விட்டு, எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் ஒரு அறையில் திறந்த நிலையில் இருந்த இரண்டு பீரோவில் வைத்திருந்த ஒரு ஜோடி வைர தோடு, 6 பவுன் மதிப்பிலான இரண்டு பிரேஷ்லெட், 12 பவுன் மதிப்பிலான 8 வளையல், மூன்றரை பவுன் கருகமணி செயின், 3 பவுன் மதிப்பிலான 4 ஜோடி தோடு, தலா ஒரு பவுன் மதிப்பிலான 4 மோதிரம் உட்பட 29 சவரன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞான் கயிறு உள்ளிட்ட வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த செல்வராணி இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் கை, ரேகை உள்ளிட்ட சில தடயங்களை சேகரித்து. செல்வராணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி துணை இராணுவ படையினர் உட்பட ஏராளமான போலீசார் பெரம்பலூர் நகர் உட்பட மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த திருட்டு சம்பவம் பொது மக்களை அச்சமடைய செய்துள்ளது.