3.5 lakh embezzled from Tasmac employees near Perambalur: Mysterious persons handcuffed

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் (டாஸ்மாக்) அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்ப்பவர் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 48),இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மதுபான விற்பனையை முடித்து விட்டு,
மதுபானங்கள் விற்ற 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் படத்தை எடுத்து கொண்டு, தற்காலிக உதவியாளரான பாடலூரைச் சேர்ந்த சுரேஷ்(40), என்பவருடன் இருசக்கர வாகனங்களில் தனித்தனியாக பாடாலூர்-தெரணி சாலையில் வந்துள்ளனர்.

அப்போது, ஊத்தங்கரை என்ற இடத்தில், வரதராஜ் என்பவரது வயலுக்கு அருகே பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென இருசக்கர வாகனங்களை வழிமறித்து வீச்சு அரிவாளால் மணிவண்ணனையும் சுரேஷை-யும் வெட்ட முயன்றுள்ளது.

இந்த திடீர் சம்பவத்தால் நிலைகுலைந்த மணிவண்ணனும் சுரேஷும் டூவீலர் களைப் போட்டு விட்டு உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டூவீலரில் டேங்க் கவரில் வைத்திருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் மூவரும் இரண்டு டூவீலர்களில் தப்பி சென்று தலைமறைவாகினர்.

இது குறித்த பாடாலூர் காவல் நிலையத்தில் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? வழிப்பறி சம்பவத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் உடைந்தையா? அல்லது இச்சம்பவம் நாடகமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டம், நக்கசேலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபான கடையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வேலை பார்த்த போது இதே மணிவண்ணனிடம் சத்திரமனை-வேலூர் சாலையில் மர்ம கும்பல் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்ததும், தற்போது மீண்டும் அதேபோல் 3.5 லட்ச ரூபாய் வழிப்பறி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுபோன்று இரவு நேரங்களில் விற்பனையை முடித்து விட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியும், மிரட்டியும், மிளகாய் பொடி தூவியும் வழிப்பறி செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருவதால், இதனை தடுக்க மாற்று வழி ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!