பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2011-12 கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளியாக அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்டம் மூலம் தரம் உயர்த்தப்பட்டது.
மீண்டும் 2014-15 கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக அரசின் திட்டம் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் 12 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்ட ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் புதிய கட்டடம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த 25 ஆம் தேி நடைபெற்றது.
அதேபோல நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் அன்னமங்கலம் தொண்டமாந்துறை சாலை முதல் பிள்ளையார் பாளையம் சாலை வரை ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியும், பாலையூர் – அனுக்கூர் – வாலிகண்டபுரம் சாலை ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகளுக்கான பூஜை இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், நகர் மன்றத் துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான பூஜைகள் நடைபெற்றது.