3 cows killed by lightning near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் அவருக்கு சொந்தமான 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்கு வயலில் விட்டிருந்தார் . அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தது.
இதே போல் , செட்டிக்குளம் அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (50). விவசாயி. இன்று அவரும் அவருக்கு சொந்தமான பசு மாட்டை கொட்டகைக்கு அருகே உள்ள மரத்தில் கட்டியிருந்தார். அப்போது திடீரென பெய்த மழையின் போது மின்னல் தாக்கியது. இதில் பசு மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கருகி இறந்தது.
இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.