3 electric buses to be run in Chennai on trial basis; Transport Minister Sivashankar Interview!

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று ஓட்டுனர், நடத்துனர்களுக்கான ஓய்வறை ஒன்றில் 2 ஏசிக்கள் பொருத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையாக மாற்றப்பட்டுள்ளது. அதனை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பணிக்காலத்தில் இறந்த வாரிசுதாரர்கள் 62 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், மகளிர் இலவச பயண திட்டத்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 2500 கோடி கிடைக்கிறது. அதனாலேயே, நமது மாநிலத்தில், மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வழங்க முடிகிறது. மற்ற மாநிலங்களில் 30 நாட்கள் கடந்து கூட சம்பளம் வழங்க முடிகிறது என்றும், மின்சார பேருந்துகள், மாநிலம் முழுவதும் ஜெர்மனி நாட்டு உதவியுடன் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 3 பேருந்துகள் வெள்யோட்டமாக இயக்கப்பட என்றும் தெரிவித்தார்.

பின்னர், கலெக்டர் அலுவகத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். எசனை கிராமத்தில், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9.75 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட மதிவண்டி நிறுத்தம், எசனையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை, கீழக்கரையில் ரூ. 17.43 லட்சம் மதிப்பில் கட்டடப்படட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம், ரூ. 9.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட விவசாய சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழச்சிகளின் போது, கலெக்டர் கற்பகம், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன், உள்ளிட்ட அதிகாரிகள், போக்குவரத்து பணியாளர்கள், மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் என். கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ராஜ்குமார், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, மற்றும் தொமுச சங்க நிர்வாகி குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஊராட்சித் தலைவர்கள் எசனை சத்யா, கீழக்கரை ஜெயந்தி உள்ளிட்ட ஊராட்சி உறுப்பபினர்கள் உள்பட பல உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!