3 hijackers seized trucks of sand near Namakkal: Inquiry
பரமத்தி வேலூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தில் 3 லாரிகளைப் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தகராறு செய்தனர். இதையொட்டி 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், வெங்கரை காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக மணல் கடத்தி வந்த மூன்று லாரிகளை கொளக்காட்டுப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி அவ்வழியாக மணல் லாரிகளை ஓட்டக்கூடாது என்று கூறினார்கள்.
இதனால் லாரி டிரைவர்களுக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், பரமத்தி வேலூர் போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
பின்னர், உரிய அனுமதியின்றி மணல் கடத்திய 3 மணல் லாரிகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.