3 killed in 3 separate road accidents in Perambalur district; Police investigation!

பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த லாரிகள் மற்றும் மினி பஸ் மோதிய சாலை விபத்துகளில் 3 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரிகள் மோதி விபத்து;

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் ரயில்வே மேம்பாலத்தில் அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது டூவீலரில் நல்லறிக்கை செல்வதற்காக வந்து கொண்டிருந்த வாலிபர் லாரியின் பின்புறம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த ஆணைமுத்துடையார் மகன் நல்லத்தம்பி (வயது 43), டிரைவர் என்பதும் தெரிய வந்தது. இதே போன்று லாரி – டூலர் மோதிய விபத்தில் டூவீரில் அமர்ந்து பயணம் செய்த கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பவரும் பரிதமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மினி பஸ் மோதி விபத்து

பெரம்பலூர் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் கனகராஜ் (வயது 35) இவர் பெரம்பலூரில் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பெரம்பலூரில் இருந்து பீல்வாடி கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருமடல் பிரிவு ரோடு அருகே சென்ற போது எதிர்பாராவிதமாக மினி பஸ்சும் – டூவீலரும் மோதிக் கொண்டது. இதில் கனகராஜ் உடலில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த கனகராஜ் உடலை மருவத்தூர் போலீசார் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்ட போலீசார், விபத்துக்கு காரணமான கனரக வாகனங்களை ஓட்டிய டிரைவர்களிடம், குன்னம், மருவத்தூர், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!