3 killed in Perambalur wall collapse!
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் வைத்திலிங்கம் இவரது மனைவி ராமாயி (47), கலியபெருமாள் மனைவி கற்பகம் (54), மற்றும் ராமயின் அம்மா பூவாயி (70) ஆகிய மூவரும், அப்பகுதியில் உள்ள வைத்திலிங்கம் என்பவரது மாட்டுப் பட்டியை கடையாக மாற்றுவதற்காக ஒரு பகுதியில் கப்பி மண்ணை கொட்டி நிரப்பி வைத்து விட்டு அசந்து சுவற்றின் அருகே உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது, பலமில்லாத ஹலோ பிளாக் சுவர், மூவரின் மீது, இடிந்து விழுந்தது. அதை அறிந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு, மண் குவியிலில் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமாயி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கற்பகம், பூவாயி காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை வந்த நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.