3 killed in two other accidents near Perambalur: More than 30 injured
பெரம்பலூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 3 பேர் பலியாகினர், 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நேற்றிரவு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆம்னி பேருந்தை தூத்துக்குடியை சேர்ந்த வேதநாயகம் மகன் ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
பேருந்து இன்று அதிகாலை சுமார் 3.45 மணிஅளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபலாபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடக்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக சாலையின் ஓரத்தின் இருந்த கட்டையில் மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்து கவிழ்நது விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (வயது 30), ராணுவ வீரர், சரவணக்குமார் மகன் முகேஷ்ராஜ் (வயது 5) என்ற சிறுவனும், கனகவேல் மனைவி ஜெகதாம்பிகை (வயது 47) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மற்ற பயணிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், காவல் துறையினர் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிறுவாச்சூர் தனியார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து :
இதே போன்று இன்று காலை சுமார் 6.00 மணியளவில் தனியர் டயர் தொழிற்சாலை பணியாளர்கள் பெரம்பலூரில் இருந்து விஜயகோபலாபுரத்தில் உள்ள தொழிற்சாலைக்கு பணிக்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சிறுவாச்சூர் அருகே மலையப்ப நகர் பிரிவு பாதையில் உள்ள உணவுவிடுதிக்கு சரக்கு இறக்க வந்த லாரி ஒன்று குறுக்கிட்டது. இதில் பெரம்பலூரில் இருந்து பணியாளர்கள் பயணிகத்த பேருந்து லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், காவல் துறையினர் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு காயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து தொடர்பாக, பெரம்பலூர் போலீசார் வழக்குப்திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வேறு விபத்துகளால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.