3-month-old baby from the mother to the bus, which runs trafficking: Mother arrested a twist police investigation!
பெரம்பலூர் மாவட்டம், தேவையூரை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மனைவி கோவிந்தம்மாள் (வயது 30), இவர் நேற்று நண்பகல் நேரத்தில், அரசுப் பேருந்தில் வாலிகண்டபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு வந்த போது மயக்க முற்றதாகவும், தண்ணீர்பந்தல் பகுதியில் வந்த போது நினைவு திரும்பி பார்த்த போது கையில் வைத்திருந்த 3 மாத பெண் குழந்தை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை மணிபர்சுடன் காணமல் போனதாகவும், நேற்று பெரம்பலூர் காவல் நிலையத்தல் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், குழந்தையை கடத்திய நபர்களை பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
மேலும், விசாரணையை தீவிரப்படுத்தியதில் கோவிந்தம்மாள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வந்ததையடுத்து அவரிடம், தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையை பெற்ற தாய் கோவிந்தம்மாளே குழந்தை கொன்று, வல்லாபுரம் அருகே உள்ள கிணற்றில் வீசியது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் கிணற்றில் இருந்து குழந்தையின் சடலத்தை தேடுதலுக்கு பின்னர் கண்டு மீட்டனர். குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், பெரம்பலூர் அரசு மருத்துவுமனைக்குஉடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கோவிந்தம்மாளிடம் குழந்தையை எதற்காக கொன்றார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.