3-month-old child abduction, purse cell phone and robbery from her mother in Running Bus near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூரை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மனைவி கோவிந்தம்மாள் (வயது 30), இவர் இன்று நண்பகல் நேரத்தில், அரசுப் பேருந்தில் வாலிகண்டபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மயக்க மருந்தால் மயக்கமடைந்துள்ளார். தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் வந்த போது நினைவு திரும்பி பார்த்த போது கையில் வைத்திருந்த 3 மாத பெண் குழந்தை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை மணிபர்சுடன் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கப் பதிந்து குழந்தையை கடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஓடும் பேருந்தில், பயணிகள் இருக்கும் போதே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!