3 women who went to bathe drowned as the Check dam of the river collapsed!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 50). இவரது மனைவி பத்மாவதி(45). அதே ஊரை சேர்ந்த உதயகுமார் மகள்கள் ராதிகா(25), ரேணுகா என்கிற லெட்சுமி(21), சுப்பிரமணியன் மகள் சவுந்தர்யா (16), மணிகண்டன் மனைவி ரஞ்சிதா (25), சரவணன் மகள் பூஜா (12), ஆகிய 7 பேரும் நேற்று ஒன்றாக சேர்ந்து கல்லாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இனாம்அகரம் கிராமத்திற்கும் அயன்பேரையூர் கிராமத்திற்கும் இடையே கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணை அருகே 7 பேரும் குளித்தனர். மேலும் அப்போது தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியாக இருந்தனர்.

பின்னர் குளித்து முடித்தவுடன் ராமர், ரஞ்சிதா, பூஜா ஆகியோர் முன்னதாக கரை ஏறி உள்ளனர். பிறகு பத்மாவதி, லட்சுமி, சௌந்தர்யா, ராதிகா ஆகியோர் தண்ணீரிலிருந்து வெளியேறி கரை பகுதிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது கரையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு ஆழமான பகுதிக்குள் சரிந்து கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்காக கைகளை கொடுத்து உதவி செய்துள்ளனர். ஆனாலும் எதிர்பாராதவிதமாக 4 பேரும் தண்ணீருக்குள் விழுந்தனர். 4 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் நீரின் ஆழத்திற்குள் சென்றனர். சத்தம் கேட்டு ஓடிவந்த ராமர் தண்ணீரில் இறங்கி மேலே கொண்டு வந்தார். ஆனால் நான்கு பேரும் தண்ணீர் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

பிறகு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பத்மாவதி, லெட்சுமி, சவுந்தர்யா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். ராதிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!