30 Vacancies in Perambalur District Home Guard Force!
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 30 (25 ஆண்கள் 05 பெண்கள்) காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
இப்பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 10.11.2023 முதல் 30.11.2023 வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் (ரேணுகா சில்க்ஸ் எதிரில்) காலை 10.௦௦ மணி முதல் மாலை 04.௦௦ மணி வரை விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இப்பணியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் உடல் ஆரோக்கியத்துடனும் தேர்வு நடைபெறும் நாளில் 20 வயது நிரம்பியவர்களாகவும் 45 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பங்கள் பெற வரும்போது கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு அசல் மற்றும் இவற்றின் நகல்கள் மற்றும் அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும். மேலும் இந்திய குடிமகனாகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விளம்பரம்:
உடற்தகுதி உயரம்: ஆண்கள் 167 செ.மீ மார்பு அளவு: ஆண்கள் சாதாரண நிலையில் 81 செ.மீ விரிந்த நிலையில் 86 செ.மீ. பெண்கள் 157 செ.மீ இருத்தல் வேண்டும்)
முக்கியமாக எவ்வித அரசியல் கட்சியில் தொடர்பு இல்லாதவராகவும் குற்ற பின்னனி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. பணி நாட்களுக்குரிய ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும்.
தேர்வு நாள் அன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது என்றும், தேர்வானவர்களுகக்கு 45 நாட்கள் அடிப்படை கவாத்து பயிற்சி வழங்கப்படும் என்றும், விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்: