31 services of RTO Office can be availed online, Perambalur Collector Information!

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று தொடர்பாக “பழகுநர் உரிமம் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் விலாச மாற்றம் செய்தல், ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிட்ட வகைகளை சரண் செய்தல், நகல் பழகுநர் உரிமம் வழங்குதல், நகல் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், ஓட்டுநர் உரிமத்தை Smart Card வகைக்கு மாற்றம் செய்தல்,

ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம் செய்தல், ஓட்டுநர் உரிமத்தின் விவரங்கள் பெறுதல், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் வழங்குதல், எளிதில் தீப்பற்றும் வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமத்தில் மேற்குறிப்பு செய்தல், நடத்துநர் உரிமம் புதுப்பித்தல், தவணைக் கொள்முதல் உடன்படிக்கை, பெயர் மாற்றம் செய்தல் (பெயர் மாற்றத்தின்போது வாகனத்தினை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்),

தற்காலிக பதிவு செய்தல், புதிய பதிவு செய்தல், நகல் பதிவுச்சான்று வழங்குதல், மறுப்பின்மை சான்று வழங்குதல், விலாச மாற்றம் செய்தல், பதிவுச்சான்றின் விவரங்கள் பெறுதல், தவணைக்கொள்முதல் ரத்து செய்தல், அனுமதிசீட்டு வழங்குதல், நகல் அனுமதிசீட்டு வழங்குதல், அனுமதிசீட்டு சரண் செய்தல், அனுமதிசீட்டு பெயர் மாற்றம் செய்தல், வாரிசுதாரர் பெயரில் அனுமதிசீட்டு மாற்றம் செய்தல் (வாரிசுதாரர்கள் நேரில் ஆஜராதல் வேண்டும்), அனுமதிசீட்டு புதுப்பித்தல், அங்கீகாரச்சான்று புதுப்பித்தல், சிறப்பு அனுமதிசீட்டு வழங்குதல், கைபேசி எண் மாற்றுதல், நகல் தகுதிச்சான்று வழங்குதல்” ஆகிய 31 சேவைகளுக்கு பொது மக்கள் அலுவலகத்திற்கு நேரில் வராமல் இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்வதற்கு தமிழக அரசால் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த சேவைகளுக்கு பொதுமக்கள் இடைத்தரகரையோ, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியையோ அணுகாமல் www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடியே உரிய கட்டணத்தை நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதற்குரிய கட்டணத்தை நெட் பேங்கிங் உள்ளிட்ட மின்னனு பணப்பட்டுவாடா வாயிலாக செலுத்தி விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்பிறகு விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுந்தகவல் விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணிற்கு வரப்பெற்றவுடன் அவரவர் சான்றிதழ் அல்லது உரிமங்களை தபால் மூலமாகவோ அல்லது, பதிவிறக்கம் செய்தோ பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்த இணையதள சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் இணைத்துள்ள விவரங்கள் பெயர், முகவரி, ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் Update செய்யப்படாமல் இருந்தால் இந்த இணையதள சேவைகளை பெறமுடியாது. எனவே இவ்விவரங்கள் சரியாக உள்ளதை உறுதி செய்து கொண்டு, ஆதார் அட்டையில் இணைத்துள்ள மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து, இச்சேவைகளை பொதுமக்கள் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே இயையதளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேயமிக்கவர்களை (Good Samaritans) விசாரணை என்ற பெயரில் அழைக்கழிப்பது மற்றும் சிரமப்படுத்துவதிலிருந்து காப்பாற்றும் வகையில் மத்திய அரசு Ministry of Road Transport and Highways Notification No.25035/27/2021-RS(195777) நாள்.03.10.2021ன் படி விபத்தில் காயமுற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் மனிதநேயமிக்கவர்களுக்கு ரொக்கமாக ரூ.5000/- வழங்கப்படும் என அறிவித்துளள்து.

மேலும், அரசாணை எண். G.O.(Ms).No.278 உள்(போ-V) துறை நாள்.12.06.2023ன் படி, சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீர்களை (Good Samaritans) ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5000/- தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5000/- சேர்த்து மொத்தம் ரூ.10,000/- வழங்கப்படும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!