3rd anniversary of former DMK leader Karunanidhi; Respect for Perambalur District DMK !!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 3 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரிக்கபட்ட உருவப் படத்திற்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை கட்சியினர் செலுத்தினர். இதேபோல் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பெரம்பலூர் நகரத்தில் ரோவர் வளைவு, சங்கு, காமராஜர் வளைவு, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பனிமனை, துறைமங்கலம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் க.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம். கே.கரிகாலன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.