4 arrested for robbing jewelery shop owner’s house in Perambalur
பெரம்பலூர் சங்கு அருகே உள்ள சர்ச் சாலையை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 60). பெரம்பலூரில் துணி மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 26 ம் தேதி இரவு 10.30 மணி அளவில், மகன் வருகைக்காக காந்திருந்த இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டாக் கத்தி முனையில் சுமார் 103 பவுன் நகை மற்றும் 9 கிலோ, 10 ஆயிரம் ரொக்கம், கார் ஒன்றையும் கொள்ளையடித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இது குறித்து கருப்பணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், சி.சி.டி.வி மற்றும் செல்போன் நெட்வொர்க்கை வைத்தும், தடயங்களை வைத்தும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கார் மட்டும் பெரம்பலூர் பகுதியில் 3 நாட்களாக நிறுத்தப்பட்டு இருப்பதை பொது மக்கள் கொடுத்த தகவலின் காரை மீட்டனர். மேலும் நடந்த தீவிர விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அரும்பாவூரை சேர்ந்த செந்தில் குமார் என்கிற மண்டை செந்தில் மற்றும் அவனது கூட்டாளி ஆனந்தன் ஆகியோரை முதற்கட்டமாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தி விசாரணையில், செந்தில், அவனது தயார் ராஜேஸ்வரி மற்றும் அவனர் மனைவி கவி மஞ்சு இருவரிடம் கொள்ளையடித்த பொருட்களை கொடுத்து வைத்திருந்ததை மீட்ட போலீசார் அவர்களையும், கைது செய்து 4 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை போன 4 நாட்களில், பொருட்களை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.