44 first-grade guards (Police) in Namakkal district have been promoted as chief guards
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 44 முதல் நிலை காவலர்கள் கடந்த 1ம் தேதி முதல் தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அன்று பணிக்கு சேர்ந்தவர்கள்.
இவர்கள் பதவி உயர்வில் சுமார் ரூ.2 ஆயிரத்து 200 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். தற்பொழுது தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளவர்களுக்கு, கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு அறிவுறுத்தலும் மற்றும் வாழ்த்தும் கூறினார்.