442 persons in the 12th grade general election in Namakkal district have scored 200 out of 200 in mathematics
நாமக்கல் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 442 பேர் கணிதத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2018 மேல்நிலைப் பொதுத் தேர்வில் 200 பள்ளிகளை சார்ந்த 13 ஆயிரத்து 25 மாணவர்களும், 13 ஆயிரத்து 318 மாணவிகளும் ஆக மொத்தம் 26 ஆயிரத்து 343 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 12 ஆயிரத்து 312 மாணவர்களும், 12 ஆயிரத்து 903 மாணவிகளும் ஆக மொத்தம் 25 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.53 சதவீதமாகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.88 சதவீதமாகும் ஆக மொத்தம் 95.72 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர் மாணவர்களை விட 2.36 சதவீதம் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும், மாநில அளவில் கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் நாமக்கல் மாவட்டம்
5ம் இடத்தை பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 86 அரசுப் பள்ளிகளை சார்ந்த 4 ஆயிரத்து 584 மாணவர்களும், 5 ஆயிரத்து 35 மாணவிகளும் ஆக மொத்தம் 9 ஆயிரத்து 619 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4 ஆயிரத்து 39 மாணவர்களும், 4 ஆயிரத்து 706 மாணவிகளும் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 739 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.98 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.47 சதவீதமாகவும் ஆக மொத்த தேர்ச்சி சதவீதம் 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 58 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இவ்வாண்டு 67 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதில் 12 பள்ளிகள் அரசு பள்ளிகளாகும். கடந்த ஆண்டை விட 9 பள்ளிகள் கூடுதலாக நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 442 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 73 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 46 பேரும், வணிகவியல் பாடத்தில் 38 பேரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதேபோல் வேதியல் பாடத்தில் 18 பேரும், இயற்பியல் பாடத்தில் 7 பேரும், பொருளியல் பாடத்தில் 2 பேரும் மற்றும் தாவரவியல் பாடத்தில் ஒருவரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் 72 மாணவர்களும், 84 மாணவிகளும் ஆக மொத்தம் 156 பேர் தேர்வு எழுதினர். இதில் 71 மாணவர்களும், 82 மாணவிகளும் ஆக மொத்தம் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மலைவாழ் மக்கள் நலத்துறை சார்பில் உள்ள 4 பள்ளிகளில் 131 மாணவர்களும், 175 மாணவிகளும் ஆக மொத்தம் 306 பேர் தேர்வு எழுதினர். இதில் 103 மாணவர்களும், 147 மாணவிகளும் ஆக மொத்தம் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமூக நலத்துறை சார்பில் உள்ள பள்ளியில் 3 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நிதி உதவி பெறும் 10 பள்ளிகளில் 642 மாணவர்களும், ஆயிரத்து 100 மாணவிகளும் ஆக மொத்தம் ஆயிரத்து 742 பேர் தேர்வு எழுதினர். இதில் 626 மாணவர்களும், ஆயிரத்து 75 மாணவிகளும் ஆக மொத்தம் ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 76 மெட்ரிக் பள்ளிகளில் 4 ஆயிரத்து 274 மாணவர்களும், 4 ஆயிரத்து 340 மாணவிகளும் ஆகமொத்தம் 8 ஆயிரத்து 614 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 219 மாணவர்களும், 4 ஆயிரத்து 321 மாணவிகளும் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 540 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
22 சுயநிதி பள்ளிகளில் 3 ஆயிரத்து 319 மாணவர்களும், 2 ஆயிரத்து 584 மாணவிகளும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 903 பேர் தேர்வு எழுதிழுதினர். இதில் 3 ஆயிரத்து 258 மாணவர்களும், 3 ஆயிரத்து 258 மாணவிகளும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 830 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.