46th State Level Kabaddi Trounament : Amateur Kabaddi Association Invites to on behalf of Perambalur District

பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் தலைவர் கி.முகுந்தன் விடுத்துள்ள அறிக்கை:


தமிழ்நாடு அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் இளையோர், சிறுவர் சிறுமியருக்கான 46 வது தமிழ்நாடு மாநில சாம்பியன்சிப் கபடிப்போட்டி வரும் நவ.29 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அதில், பெரம்பலூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்ள விரும்பும் வீரர் – வீராங்கணைகள் பொறுக்குத் தேர்வு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் நவ.17 அன்று நடைபெறுகிறது.

அதற்கான தகுதிகள்: 31.12.1999 அன்றோ அதற்குப் பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும், சிறுவர்களுக்கு 70 கிலோ மற்றும் அதற்கும் கீழ் எடை அளவும், சிறுமியர்களுக்கு 65 கிலோ மற்றும் அதற்கும் கீழும் இருக்க வேண்டும். வயது சான்றுக்காக , ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இவற்றுடன் ஏதாவது ஒன்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் மார்பளவு புகைப்படத்தை கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!