47 government buses to operate in Perambalur district after 68 days

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 5 வது கட்டமாக வரும் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வைரஸ் தொற்று அதிகம் பாதிக்காத பகுதிகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 8 மண்டலங்களாக பிரித்து, 50% சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்கு பின்னர் பொது போக்குவரத்து இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பெரம்பலூர் டெப்போவில் உள்ள 93 பேருந்துகளில் நகர் பகுதிகளில் 18 பேருந்துகளும் புறநகர் பகுதிகளில் 29 பேருந்து களும் என மொத்தம் 47 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஒரு வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டு இருப்பின், தற்போது அந்த வழித்தடத்தில் ஒரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

குறிப்பாக பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து திருச்சி,அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, துறையூர், உடும்பியம், திருமாந்துறை உள்ளிட்ட வழித் தடங்களில் பேருந் துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை தொடங்கிய பொது போக்குவரத்து இரவு 9 மணி வரை நீடிக்கும்.

வழக்கம் போல் இன்று காலை பயணத்தை தொடங்கிய அரசு பேருந்துகள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து பணி செய்து வருகின்றனர்.

டெப்போவில் புறப்படும் போதும் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் போதும் கிருமிநாசினி மூலம் பேருந்துகள் சுத்தம் செய்ய ப்படுகிறது.

பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறு த்தப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பேருந்துகளில் பின் படிக்கட்டு களின் வழியாக ஏறிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் முக கவசம் அணிந்து உள்ளனரா? தனிநபர் இடை வெளி விட்டு இருக்கைகளில் அமர்ந்து உள்ளனரா என கண் காணிக்க படுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இயக்கப்படும் பொது போக்கு வரத்து பணிகளில் ஓட்டுனர் நடத்துனர் டிக்கெட் பரிசோதகர் கிருமி நாசினி தெளித்து பவர் கண்காணிப்பாளர் என 230க்கும் மேற் பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக எந்தெந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க ப்படுகிறது என குழப்பமடைந்துள்ளார் பொதுமக்கள் அதற்கான அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!