48th Day Mandal Pooja at Poolambadi Draupadi Amman Temple: Devotees attend in large numbers!
பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டல பூஜை நிறைவுற்றதை அடுத்து சாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி மந்தைவெளியில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் பன்னாட்டு தொழிலதிபர் வள்ளல் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் தலைமையில் புணரமைக்கப்பட்டு கடந்த மாதம் 6 ந்தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் கோவிலில் மண்டல பூஜை மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.
48 நாள் மண்டலபூஜையின் நிறைவு பூஜை இன்றுநடைபெற்றது. நிகழ்விற்கு கோவில் அறக்கட்டளை தலைவர் சூரியபிரகாசம் தலைமை வகித்தார். முதலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசால பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீதிரவுபதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலஙகாரம் செய்து மஹாதீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.