5 bundles of rice, about 21 pounds of jewelery looted near Perambalur: Police are investigating!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் பூட்டிய 2 வீடுகளில், 5 மூட்டை அரிசி, சுமார் 21 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (57), தச்சு தொழில் செய்து வரும் இவர், வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த நிலையில், அவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டிலிருந்த முக்கால் பவுன் மதிப்புள்ள தோடு. மோதிரம் திருடி சென்றனர், அதே கிராமத்தை சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்தும், சுமார் 20 பவுன் தங்க நகைகைளை கொள்ளையடித்தோடு, முத்தையாபிள்ளை என்பவரது வீட்டில், 25 கிலோ எடை கொண்ட 5 அரிசி மூட்டைகளையும் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி, சஞ்வீவ்குமார், மற்றும் பாடாலூர் எஸ்.ஐ. சிக்கந்தர் பாஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர். மேலும், தடயஅறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கைரேகை மற்றும், தடயங்களை சேகரித்த போலீசார், கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பூட்டு உடைக்கப்பட்டு 3 பேரின் வீடுகளிலும், வெளியூர் சென்றிருந்தனர். வீடுகளின் பூட்டுகள் உடைக்ககபட்டு திறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பினால் மட்டுமே காணமல் போனவை என்ன என்பது முழுமையாக தெரிய வரும். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.