5 lakh 39 thousand 354 voters in Perambalur and Kunnam constituencies: Collector

பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் 5 லட்சத்து 39 ஆயிரம் 354 வாக்காளர்கள் உள்ளனர் என வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளா; பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற்று வந்தது.

இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடிகளில் 1,37,969 ஆண் வாக்காளா;களும், 1,43,461 பெண் வாக்காளா;களும், 15 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,81,445 வாக்காளா;கள் உள்ளனர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் 1,28,549 ஆண் வாக்காளா;களும், 1,29,350 பெண் வாக்காளா;களும், 10 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,57,909 வாக்காளர்கள் உள்ளதாகவும்,

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளிலும் 2,66,518 ஆண் வாக்காளர்களும், 2,72,818 பெண் வாக்காளர்களும், 25 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,39,354 வாக்காளர்கள் உள்ளதாக ஆட்சியர் சாந்தா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!