5 pound flush with woman trying to board bus in Perambalur
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கலி பறித்து சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சந்திரா (47) என்பவர், பெருமத்தூர் கிராமத்தில் தனது உறவினர்களின் கர்மகாரியத்திற்கு செல்ல, பழைய பேருந்து நிலையத்தில் பெரம்பலூரிலிருந்து கிளியூர்-பெருமத்தூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறும் பொழுது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.