5 pound thali chain stolen from an old lady near Perambalur district!
பெரம்பலூர் மாவட்ம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மனைவி செல்லம்மாள் (70), துரைசாமி இறந்துவிட்டதால், செல்லம்மாள் தனியாக வசித்து வருகிறார். நேற்றிரவு, வெப்பம் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர், முகத்தில் துண்டை போட்டு, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதில் மூதாட்டிக்கு, சிராய்ப்பு ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து வ.களத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.