50 per cent subsidy for rainfed farmers in Perambalur district: Collector V. Santha

பெரம்பலூர் மாவட்ட மானாவாரி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் இடு பொருட்கள்: கலெக்டர் வே.சாந்தா

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளர்ச்சி இயக்கம் (Tamil Nadu Mission on Sustainable dry land Development – TNMSDD) 2020-21-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் கடந்த மூன்று 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் செயல்படுத்தப்படாத கிராமங்கள் மற்றும் இத்திட்டத்தில் இணையாத விவசாயிகள் இந்த ஆண்டு தோ;வு செய்யப்படுவாh;கள்.

பெரம்பலூர் மாவட்ட மானாவாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளர்ச்சி இயக்கம் என்ற திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் 100 எக்டர் கொண்ட தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு செய்வதற்கு எக்டருக்கு ரூ.1250- மான்யமும், சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், ஊடுபயிர் சாகுபடிக்கான விதைகள் ஆகியன 50 சதவீதம் மான்யத்தில் வழங்கப்படும். மேலும் தெரிவு செய்யப்பட்ட தொகுப்பில் சிறப்பாக செயல்படும் விவசாயிகள் குழுவிற்கு விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான இயந்திரங்கள் கொள்முதல் செய்திட ரூ.10- லட்சம் மான்யம் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டம் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் 150 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இத்தொகுப்புகளில் உள்ள மானாவாரி நிலங்களில் வீரீய ஒட்டு ரக மக்காச்சோளம் 12,000 எக்டரிலும், பி.டி, பருத்தி 3000 எக்டரிலும் மொத்தம் 15,000 எக்டரில் சாகுபடி செய்திடவும் ஊடுபயிராகவும், ஓரப்பயிராகவும் பயறு வகைகள் சாகுபடி செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் வட்டாரத்தில் 30 தொகுப்புகளும், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை வட்டாரங்களில் தலா 40 தொகுப்புகளும் மொத்தம் 150 தொகுப்புகளில் ல்படுத்தப்படவுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மானாவாரி விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!