500, thousand banknotes Cooperative Union workers demonstrated to demand the supply of new banknotes
கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க கோரி கூட்டுறவு சங்க பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆர்ப்பாட்டத்தில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், ரூபாய் 500 மற்றும் ஆயிரம் வாங்க அயலாத நிலையில் உள்ள உறுப்பினர்களின் நகைக்கடன் , பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும், கூட்டுறவு வங்கிகளுக்கு பழைய ரூபாய் தாள்களை பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் தாள்களை வழங்குவதுடன், கூட்டுறவு வங்கிகளில் உள்ள பழைய ரூபாய் தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருமணம், சடங்கு மற்றும் அத்தியாவசிய சம்பிரதாயங்களுக்கு, அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை திருப்பி அளிக்க நல்லொரு முடிவு எடுப்பதுடன், பயிர்க் காப்பீடு திட்டத்தின், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கூட்டுறவு பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.