55th National Pharmacy weeks: in Perambalur awareness of diabetes
பெரம்பலூரில் உள்ள தனியார் பார்மசி கல்லூரி மாணவர்கள் சார்பில் இன்று 55 வது தேசிய மருந்தியல் வாரவிழா கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, இன்று நீரிவு நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலக்கரையில் இருந்து தொடங்கி, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு என முக்கிய வீதிகள் வழியாக கல்லூரியை வந்தடைந்தனர்.
பேரணியில், நீரிவு நோயால் பாதிக்கப்ட்டவர்கள், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்து கொள்ளக் கூடாது, அந்நோயாளிகளிகள், மிட்டாய், அல்லது சர்க்கரை போன்ற பொருட்களை உடன் வைத்து இருக்க வேணடும், மது, புகையிலை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேரணியில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.