பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமுதாயத்திலுள்ள அனைத்து குழந்தைகளும் அன்பு, மகிழ்;ச்சி, புரிதல் கொண்ட குடும்ப சூழலில் வளா;வதற்குhpய வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பெற்றோர் பாதுகாவலர் எவருமின்றி குழந்தைகள் இல்லங்களில் வளரும் குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள்,
பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள், சிறையில் உள்ளவர்களின் குழந்தைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், உடல், மனம், பாலியல் hPதியான துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகள், இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,
குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 6 முதல் 18 வயது வரையுள்ள ஆதரவற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்காக வளர்ப்பு பராமரிப்பு என்ற திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வளர்ப்பு பராமரிப்பு மாதிரி வழிகாட்டுதல்-2015ல் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு வளர்ப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெற்றோர் என்பவர் பெற்ற குழந்தைகளை வளர்ப்பவர்களாகவோ, குழந்தை இல்லாதவர்களாகவோ, தத்தெடுப்பதற்குரிய தகுதிகளுடன் குழந்தையை தத்தெடுக்க காத்திருப்பவர்களாகவோ, குழந்தைகளை தத்தெடுக்க கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளுக்கு உட்படாதவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
தத்தெடுக்கும் குழந்தைக்கு போதுமான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கல்வி மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்து தரும் அளவிற்கு பெற்றோருக்கு பொருளாதார வசதி இருக்க வேண்டும்.
இவ்வாறு வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும்.
வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் குழந்தையின் விருப்பப்படி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை நலக்குழுவின் முடிவே இறுதியானதாகும்.
வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை வளர்ப்பதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் நடைமுறைகளை தெரிந்து கொள்வதற்கும்“ எண்.164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர் ” என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அல்லது குழந்தை நலக்குழுவினை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 04328-275020 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.