6 new state bus movement in Poolambadi: Businessman Dato Pragadeshkumar inaugurated the flag.

பூலாம்பாடியில் இருந்து சென்னை, கோவை உட்பட ஆறு புதிய வழித்தடங்களில் அரசு போக்குவரத்தை கழக பேருந்துகளை பிரபல மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்ட டத்தோபிரகதீஷ்குமார் (DATO. S. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies) பூலாம்பாடி மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பல நற்காரியங்களை செய்து வருகிறார். பூலாம்பாடி கிராமத்தில் மாணவர்களின் நலன் கருதி நூலகம் அமைப்பதற்கு 1 லட்ச ரூபாய் நன்கொடையும், விவசாயிகளின் நலன் கருதி ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு 5 சென்ட் இடத்தையும் சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். மேலும், 40 லட்ச ரூபாய் சொந்த செலவில் தார் சாலை, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக 40 லட்ச ரூபாய் மதீப்பீட்டில் இரண்டு பண்ணைக் குட்டைகள், பூலாம்பாடி அரசு மருத்துவமனைக்கு போதிய உதவிகளையும், ஆலய புணரைமைப்பு பணிகள் செய்து கொடுத்ததோடு, சுற்றுச்சாலை அமைக்கவும், 5 ஆயரம் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்கள் சுற்று சுவரை பேணி காக்க அக்கரை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய சொந்த காசில் பெயிண்ட் வாங்கி கொடுத்து ஓவியம் வரையக் கூறி அழகுப்படுத்தினார்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் பூலாம்பாடி பேரூராட்சி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக உள்ளது. மேற்கு பகுதி முழுவதும் பச்சைமலைத் தொடர் அரணாக இருப்பதால், இப்பகுதியில் இருந்து பெரம்பலூர் மற்றும் ஆத்தூர் போன்ற நகரங்களுக்கு பேருந்து மட்டுமே போக்குவரத்து சாதனமாக உள்ளது. இப்பகுதியில் இருந்து பல்வேறு வர்த்தக காரணங்களுக்காக வெளியூர் செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும், பூலாம்பாடி அதனை சுற்றியுள்ள கிராமக்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் போது 2 அல்லது 4 பேருந்துகள் மாறி மாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால், பணம், நேரம், வீண் அலைச்சல் ஏற்படுகிறது. தனி நபராக சென்றால் கூட பரவாயில்லை, மூட்டை முடிச்சுகள், குழந்தைகளுடன் செல்லும் போது கடும் அவதிப்படுவதாக அறிந்த டத்தோ பிரகதீஸ்குமார், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொதுமக்களின் கோரிக்கையை எடுத்துரைத்தார். பின்னர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் ஆலோசனை செய்து பூலாம்பாடியில் இருந்து சென்னை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, முசிறி ஆகிய ஆறு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து இயக்குவதற்கு டத்தோ பிரகதீஸ்குமார் அனுமதிபெற்றார். அதைத் தொடர்ந்து புதிய வழித் தடங்களில் பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பூலாம்பாடியில் உள்ள மேற்கு மந்தைவெளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டத்தோபிரகதீஸ்குமார் கொடியசைத்து புதிய வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ கள் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன், ஆத்தூர் சின்னதம்பி, தலைவாசல் மருதமுத்து, பஞ்சு உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ராமசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், சேலம் மண்டல போக்குவரத்து மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பேசிய டத்தோபிரகதீஸ்குமார் , தம்மால் முடிந்த அளவு பூலாம்பாடி மட்டுமில்லாமல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேவையான நற்காரியங்களையும் செய்து தருவேன் என குறிப்பிட்டார். மேலும் பூலாம்பாடி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் நலன்கருதி புதிய கட்டிடம் கட்டித்தர உள்ளதாகவும், பூலாம்பாடியில் சுற்றுச் சாலை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் டத்தோபிரகதீஸ்குமார் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பணிமனையில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் பேருந்து கீழப்பழுவூர், அரியலூர், குன்னம், பெரம்பலூர் வழியாக பூலாம்பாடிக்கு காலை 9.05 மணிக்கு வந்தடையும், இந்த பேருந்து 4 முறை இயக்கப்படும், கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்படும் பேருந்து, காலை 5.15 மணிக்கு புறப்படும் பேருந்து பூலாம்பாடி, வீரகனூர், தலைவாசல் சின்னசேலம் வழியாக கள்ளக்குறிச்சியை சென்றடையும் இந்த பேருந்து 6 முறை இயக்கப்படும், இதனால் பயணிகள் பேருந்து மாறி செல்வது தடுக்கப்படுவதுடன், பணம், நேரம் மிச்சமாகும்.இதே போன்று நாமக்கல்லில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படும் பேருந்து ஆண்டலூர் கேட், ராசிபுரம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வழியாக 8.30 மணிக்கு பூலாம்பாடியை வந்தடையும், இந்த பேருந்து 4 முறை இயக்கப்படும், பூலாம்பாடியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் பேருந்து பெரம்பலூர், துறையூர், வழித்தடத்தில் முசிறியை காலை 9.10 மணிக்கு சென்றடையும். ஆத்தூரில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் பேருந்து 10.30 மணிக்கு பூலாம்பாடிக்கு வந்து 10.50 மணிக்கு சென்னைக்கு, வீரகனூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, வழியாக சென்னையை காலை 5 மணிக்கு சென்றடையும். ஆத்தூரில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு பூலாம்பாடிக்கு காலை 4.05 க்கு வரும் பேருந்து 4.15 மணிக்கு பூலாம்பாடி, வீரகனூர், ஆத்தூர், சேலம் வழியாக காலை 11.30 மணிக்கு கோவையை சென்றடையும், மீண்டும் மதியம் 1.15 மணிக்கு கோவையில் புறப்படும் பேருந்து பூலாம்படிக்கு 8.30 மணிக்கு வந்தடைந்த பின்னர், ஆத்தூருக்கு இரவு 9.35 மணிக்கு சென்றடையும். இந்த பேருந்துகள் வரவால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பூலாம்பாடி மக்கள் மட்டுமல்லாது பேருந்துகள் செல்லும் வழித் தடத்தில் உள்ள ஊர் கிராம மக்களும் பயடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கையை ஏற்று பூலாம்பாடிக்கு புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்குவதற்கு முழு ஏற்பாடு செய்து கொடுத்த டத்தோ.சூ.பிரகதீஸ்குமாருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பஞ்சு உற்பத்தியாளர் சங்க மாநிலதலைவர் ஏ.கே. ராமசாமி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி,போக்குவரத்து மேலாளர் ஆறுமுகம்,வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் டி.என்.சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணண் உட்பட கிராம முக்கியப் பிரமுகர்கள், பூலாம்பாடி அதிமுக பேரூர் கழக நிர்வாகிகள், அரசு போக்குவரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். டி.எஸ்.பி கென்னடி தலைமையில் அரும்பாவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!