661 people, including 139 children, stay in Perambalur Nivar storm camps

தமிழ்நாடு அரசு, புயலால் பொதுமக்கள் பாதிப்படையாமல் பாதுகாத்திடவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், பழுதடைந்த, சேதமடைந்த கூரை வீடுகளில் வசிப்பவர்கள், திறந்த வெளியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், பெரம்பலூர் வட்டத்தில், கல்பாடி அங்கன்வாடி மையம், நாவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, களரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிறுவாச்சூர் கண்ணகி நாடக மண்டபம், குரும்பலூர் சமுதாய கூடம், வேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொம்மனாப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலப்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆகிய இடங்களிலும், ஆலத்தூர் வட்டத்தில் உட்பட்ட ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மதுரகுடிக்காடு, ஆதனூர் அங்கன்வாடி மையம், கொட்டரை ராஜிவ்காந்தி சேவா கேந்திரியா, கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி, இலந்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், குன்னம் வட்டத்தில் வேள்விமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி, பள்ளக்காளிங்கராயநல்லூர; ஆர;.சி அரசு உதவி பெறும் பள்ளி, மேட்டுக்காளிங்கராயநல்லூர; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் எறையூர் சமுதாய நலக்கூடம், பசும்பலூர் அரசு உயர் நிலைப் பள்ளி, பெரிய வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அனுக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அ.குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, என மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் சிறப்பு நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 198 ஆண்களும்,324 பெண்கள், 139 குழந்தைகள் என மொத்தம் 661 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவருக்கும் காய்ச்சல மற்றும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.