ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 6,668 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் உள்ள மரகத வள்ளி தாயார் கோவில் வளாகத்தில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுக மாவட்ட மாணவரணி செயலரும், பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நகர செயலர் ஆர். ராஜபூபதி, நகராட்சி தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தையல் இயந்திரங்கள், குத்து விளக்குகள், குடங்கள், வேட்டி- சேலைகள், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 6,668 நபர்களுக்கு வழங்கி மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஒன்றியங்களில் இருந்து ஏராளமான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது, இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்ச ரூபாய் இருக்கலாம் என கருதப்பபடுகிறது.
விழாவில், மாவட்ட அணி செயலார்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், குரும்பலூர் பேரூர் செயலர் செல்வராஜ், சங்கு சரவணன், டாக்டர் அன்பழகன், எசனை – கீழக்கரை பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.