Rs.69,200 undocumented money seized near Perambalur!
இன்று காலை 10.54 மணி அளவில் செந்துறை – R.S.மாத்தூர் செல்லும் சாலையில் தோட்டக்கலை துறை அலுவலர் மாலதி தலைமையிலான பறக்கம்படை குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காரில் வந்த இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் கொளஞ்சிநாதன் (50) என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.69,200/- ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.