75th Independence Day Art Program Gives Prizes to Students Who Raised Awareness About Drug Eradication: Collector, S.P!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 75 -வது சுதந்திர தின அமுதப்பெரு விழா கலை நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு குறித்து சிறப்பாக ஓரங்க நாடகம் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கெளதமபுத்தர் செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 11 மாணவர்களுக்கு கலெக்டர் வெங்கடபிரியா மற்றும் போலீஸ் எஸ்.பி., மணி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளாக இருந்த போதிலும் சமூக அக்கறையுடன் போதை ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சியில் சிறப்பாக நாடகம் நடித்த மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினர்.

மேலும், தொடர்ந்து, சுதந்திர தினத்தன்று சிறப்பாக செயலாற்றிய கூட்டு குழலிசை வாசித்த பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த 11 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்) மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!