75th Independence Day Elixir Festival, Exhibition; Minister Sivasankar opened the function and provided welfare assistance of Rs. 80.40 lakhs.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 75வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் இன்று
திறந்து வைத்து பார்வையிட்டார்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, கனிம வளத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அரங்குகளை தொடங்கி வைத்து அங்கு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த விளக்க பதாகைகளை பார்வையிட்டு, அரசுத் துறைகளின் சார்பில் 328 நபர்களுக்கும் 10 வேளாண்மை குழுவினர்களுக்கும் என ரூ.80.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் 75வது சுதந்திர தின விழாவினை தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாக கொண்டாடும் வகையில், சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பல்வேறு துறைகளின் மூலம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகின்ற அரசு திட்டங்கள் குறித்த விளக்கங்களும், அரசுத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றது.

தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு இசைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் இந்தக் கண்காட்சியினை பார்த்து பயனடைய வேண்டும், என தெரிவித்தார்.


இதில், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், ஏ.கே.பெருமாள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ரவிபாலா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால், போக்குவரத்துத்துறை கோட்ட மேலாளளர் ராமநாதன், மேலாளர் தி.ஞானமூர்த்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்சசி திட்ட அலுவலர் சுகந்தி, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!