படவிளக்கம்: ஊதா கலர் சட்டை போட்டு இருப்பவர் கவுதம்.
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சினிமா இயக்குனர், உதவி இயக்குனர் காயம்! மருததுவ மனையில் அனுமதி
இன்று மதியம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கார் பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் பிரிவு சாலை அருகே வந்த போது காரின் முன்புற டயர் வெடித்தது. இதில் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த
திரைப்பட இயக்குனர் சரவணன், அவரது மைத்துனரான உதவி இயக்குனர் கௌதம் ஆகிய இருவர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார், நெடுஞ்சாலை துறையினர் சம்ப இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் திரைப்பட இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும், வலியவன், இவன் வேறமாதிரி படங்களை இயக்கி உள்ளார்.
இருவரும் தங்களது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், வரகூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
சென்னையிலிருந்து தொழுதூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுவிட்டது. காரை இயக்குனர் சரவணன் ஓட்டி வந்துள்ளார்.
இதுக்குறித்து மங்கலமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.